|
வசதியானது! மிக எளிதானது!
பாரம்பரிய முறையில் இடியாப்பம் செய்ய அழுத்திப்பிழிய வேண்டும். ஒருவராகக் கையாள்வது சிரமம். சேவைமேஜிக் பயன்படுத்தி சேவை செய்யும்போது முதுகு வளைந்து வலியெடுக்காது. இயந்திரத்தைப் பிடித்துக்கொள்ள இன்னொருவரை அழைக்கும் சிரமமும் இருக்காது.
ஆரோக்கியம் & சுகாதாரம்
சேவை ஆரோக்கியமானது, கொழுப்புச்சத்து அற்றது, இட்லி போலவே வேக வைக்கப்பட்ட உணவு. எண்ணெய் இல்லாத, கைகள்படாத சுவையான சேவை கிடைப்பது சேவைமேஜிக்கில் மட்டுமே. சேவைமேஜிக்கின் துணையோடு உங்கள் சுமையைச் சுகாதாரத்தை மேம்படுத்துங்கள்.
ஒரே மூச்சில்... ஒரே வீச்சில்
சேவை செய்வதென்றால் பற்பல படிநிலைகள், பல்வேறு பாத்திரங்கள் என்று முழுநீள நாடகம் போல் நடக்கும். அதை ஒரங்க நாடகமாய் ஆக்கிவிட்டது சேவைமேஜிக். கிரைண்டர் தவிர வேறெந்தப் பாத்திரமும் தேவையில்லை. சேவைமேஜிக் இருந்தால் போதும்.
காப்புரிமை பெற்ற தொழில்நுட்பம்
எட்டாண்டு கால ஆராய்ச்சியின் விளைவாக உருவாகியுள்ள சேவைமேஜிக் தொழில் நுட்பம் காப்புரிமை பெற்றது (இந்தியக் காப்புரிமை 201479இ நாள் : 8-6-2001)
நான் ஸ்டிக் PTFE பூச்சு
சேவைமேஜிக்கின் மேற்பரப்பு நான்ஸ்டிக் பூச்சு கொண்டுள்ளது. எளிதாக சுத்தம் செய்யலாம். உணவும் வீணாகாது.
பாதுகாப்பானது
சாதாரண பிரஷர் குக்கரின் அதே அழுத்தத்தில செய்யப்படும் நியூ ஹோம் சேவைமேஜிக்கில் கீழ்க்கண்ட பாதுகாப்பு அம்சங்கள் பரிசோதிக்கப்பட்டு அமைக்கப் பட்டுள்ளன.
1. கேஸ்கட் வெளியாகும் முறை
2. ஆவி வெளிப்பட வெயிட் வால்வு
3. மேல் மூடிக்கு இரட்டைத்தாழ் முறை
தரம் மற்றும் நம்பகம்
அலுமினியம் அலாய், ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல், ஃபுட்கிரேட் பிளாஸ்டிக், ரப்பர் போன்ற துருப்பிடிக்காத பொருட்களே பயன்படுத்தப்படுகின்றன.
|