|
1. மாவுக் கொள்கலனின் கொள்ளளவு என்ன? ஒரு முறை (அடைசல்) எவ்வளவு சேவை தயாரிக்கலாம்?
ஒரு அடைசலுக்கு சுமார் 800 மிலி அளவுள்ள மாவு கொள்ளும். இதிலிருந்து சுமார் 800 - 1000 கிராம் சேவை கிடைக்கும். 
2. கீழ்ப்பாத்திரத்தில் போதுமான நீர்விடாவிட்டால் என்ன ஆகும்?
சமைக்கும்போது பாதியில் தண்ணீர் தீர்ந்துவிட்டால் கீழ்ப்பாத்திரம் அதிக சூடாகி, உள்ளே இருக்கும் ரப்பர் கேஸ்கட்டுகள் சேதமாகும். ரப்பர் கருகும் வாடையும் கிளம்பும். சேவைத்தட்டு/மூடி போன்றவற்றிற்கு இதனால் பாதிப்பு வராது. இருப்பினும் இந்த நிலை கவனிக்கப்படாமல் மேலும் தொடர்ந்தால் சரிசெய்யப்பட முடியாத அளவுக்கு பாத்திரங்களும் கேசுகட்டுகளும் சேதமடையும்.

3. பிழியப்பட்ட பின் சேவையில் பச்சை வாசம் இருப்பின் எப்படிப் போக்குவது?
நல்ல ரக அரிசிகளுடன் சரியான அளவு நேரம் வேகவிட்டால் இந்த நிலை வருவதில்லை. எதாவது காரணத்தால் பச்சை வாசம் வரும்போது, சேவைமேஜிக்கில் வைத்தே ஆவியில் வேகவிடவும். இதற்கான செய்முறை முன்பே விளக்கப்பட்டுள்ளது.

4. சேவைமேஜிக்கில் உள்ள பிளாஸ்டிக் பாகங்கள் பத்திரமானவையா?
உயர்தரமான ஏபிஎஸ்/பிபி பிளாஸ்டிக்குகளே சேவைமேஜிக்கில் பயன்படுத்தப்படுகின்றன. இவை உணவுப்பயனுக்கு ஏற்றவை, எந்த விஷப்பொருளையும் வெளிவிடாதவை. சேவைத்தட்டும் மூடியும் நேரடியாக நுண்ணலை அடுப்பில் (மைக்ரோவேவ் அவனில்) சூடாக்கவும் ஏற்றவையே.

5. முழுக் கொள்ளளவுக்கும் குறைவான அளவு சேவை தயாரிக்க சேவைமேஜிக்கைப் பயன்படுத்தலாமா?
தாராளமாக. ஆனால் குறைந்த அளவு தயாரிக்கும்போது சமைக்க ஆகும் நேரத்தில் பெரிய மாறுதல் இருக்காது.

6. சேவை பிழிய ஆரம்பிக்கும்போது முதலில் நீர்/கூழ் போன்ற திரவம் சிறிதளவு துளைகள் வழியாக வெளிவருகிறது. இதனால் ஏதும் பிரச்னை வருமா?
இல்லை, இதனால் ஏதும் பிரச்னை இல்லை. உள்ளே நீராவி குளிர்ந்து நீராகத் தேங்குவதாலேயே இது ஏற்படுகிறது. சற்று நேரத்தில் சேவை இழை நன்கு வரத் தொடங்கிவிடும்.

7. கடைகளில் கிடைக்கும் உடனடி சேவை மாவு (பொடி) பயன்படுத்தலாமா?
பெரும்பாலும் இவை சேவைமேஜிக்கில் பயன்படுத்த பொருத்தமானவை அல்ல. சோதித்துப் பார்த்து முடிவு செய்யவும்.

8. சேவைமேஜிக்கில் சேவை வேகும்போது முட்டை/காய்கறி போன்ற வேறு பொருட்களையும் வேகவிடலாமா?
கூடாது. சேவை தயாரிக்கும்போது கீழ்ப்பாத்திரத்தில் நீரைத்தவிர வேறு உணவுப்பொருட்களை வைக்கக்கூடாது
 |