|
நியூஹோம் சேவைமேஜிக். இனிய, எளிய வாழ்க்கை முறையை வகுத்திட தொலைநோக்கு மிக்க தொழில்நுட்பப் புதுமைகளின் தாயகமாய் கோவையில் இயங்கும் தொழிலகமாகிய நியூஹோம் இன்னோவேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் பெருமைமிகும் அறிமுகம்.
சேவையின் தேவை
தென்னிந்தியாவின் புகழ்மிக்க உணவாகிய சேவை "இந்தியாவின் உடனடி நூடுல்ஸ்" என்று சொல்லலாம். சேவை, சந்தகை, சேமியா, இடியாப்பம் என்று இதற்குத்தான் எத்தனை பெயர்கள்! சாப்பிட உகந்தது, சக்தி தருவது, எளிதில் ஜீரணமாவது, கார்போஹைட்ரேட் சத்து கொண்டது, நோயாளிகளுக்கும் ஏற்றது என்று சேவையின் புகழ் நீண்டு கொண்டே போகும். அரிசி மாவில் கருவாகி வேக வைத்தலில் உருவாகி அவதாரம் எடுக்கும் சேவை, இலட்சக்கணக்கானவர்கள் ஆசை ஆசையாய்ச் சாப்பிடும் அன்றாட உணவாகும்.
சேவைசெய்பவர்களுக்கொரு சேவை
எல்லோருக்கும் பிடித்த இடியாப்பம் சேவையைத் தயார் செய்வதுதான் இடியாப்பச் சிக்கலாய் இதுவரை இருந்து வந்திருக்கிறது. மாவாட்டுவதில் தொடங்கி, கொழுக்கட்டை செய்வது, சேவை பிழிவது என்று நேரமும் வேலைப்பாரமும் அதிகமாகி பெண்களைப் பிழிந்தெடுக்கும் இந்த நடைமுறையை நினைத்துப் பார்த்ததன் விளைவுதான் நியூஹோம் சேவைமேஜிக்கின் உருவாக்கம். மாவு அரைக்கப்பட்டவுடன் சுவையான சுகாதாரமான சேவை உடனே உருவாகிறது.
|

|
|
நியூஹோம் சேவைமேஜிக் - உருவாக்கம், வடிவமைப்பு, பயன்பாடு
படைப்பாற்றல் கொண்ட பொறியாளர்கள் இணைந்து உருவாக்கிய நிறுவனத்தின் இணையற்ற தயாரிப்பாகிய சேவைமேஜிக், பல்லாண்டு கால ஆய்வின் விளைவு. ஆவி அழுத்தத்தில் சேவை தயாரிக்கிறது சேவைமேஜிக். எனவே சுவையான சுகாதாரமான சேவை கிடைக்கிறது.
50 ஆண்டு காலமாய் பயன்படுத்தப்பட்டு வரும் பிரஷர் குக்கர் பாணியிலேயே, இல்லத்தரசிகளால் எளிதில் பயன்படுத்தக்கூடிய முறையில் சேவைமேஜிக் வடிவமைக்கப்பட்டுள்ளது.
(சேவைமேஜிக் பயன்படுத்தும் முறையை அறிய இங்கே 'க்ளிக்' செய்யுங்கள்). குறிப்பிட்ட அளவு தண்ணீர் ஊற்றியபிறகு கேஸ்கட்டுடன் கூடிய பாத்திரம் உள்ளே வைக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட அளவு மாவை ஊற்றிய பிறகு மேல்மூடி பொருத்தப்பட வேண்டும். 20 நிமிடங்கள் வேகவைத்தபிறகு வெயிட் வால்வ் பொருத்தப்பட்டதும் சேவை இழைஇழையாய் வெளிவருகிறது.
|